புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2016

பல் வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ராமேஸ்வரத்தில் இன்று நான்காவது நாளாக வேலை நிறுத்தம் சுமார் 60 ஆயிரம் பேர் பாதிப்பு பல கோடி வர்த்கம் முடக்கம்

ராமேஸ்வரம் மீனவர்கள் பல் வேறு கோரிக்கைகளை
வழியுறுத்தி  இன்னு நான்காவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம்  தொடர்கிறது
இதில் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது மேலும் சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களையும் 114 விசைபடகுகளையும் விடுதலை செய்யவேண்டும  நான்காம் கட்ட பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும்
பாரம்பரிய கடல் பகுதியில் இழந்த மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வழியுறுததி கடந்த 1 ந் தேதி முதல்  காலவரம்பற்ற வேலை நிறுத்தப் பாராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
அடுத்த கட்டமாக  செப் 12 ந் தேதி  ராமேஸ்வரம் பேரூந்து நிலையம் எதிரே சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் அறிவித்துள்ளனர்
வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஜந்து ஆயிரத்திற்க்கும் மேறப்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் சுமார் 50 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட சார்பு தொழிலாளர்களும் வேலையிழப்பதோடு  வர்த்தக நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளது
துறைமுகம்  ஆள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடிக்காணப்பட்டது மூன்றாவது வேலை நிறுத்தப் போராட்டத்தால்   சுமார் ரூ ஆறு கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும்  இந்நிலை நீடித்தால் மீன்பிடி தொழில் அழியும் அபாய  நிலை ஏற்படும்  எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்

ad

ad