புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2016

விசஊசி விவகாரம்! முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது:

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்நலம் தொடர்பில் நிலவுகின்ற
கவலைகளைக் கருத்திற்கொண்டு, வடமாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களது நலன்கள் தொடர்பாக எமது அமைச்சு கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் மேற்படி புனர்வாழ்வு பெற்றவர்கள் தமது உடல்நிலை தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளையும் மருத்துவக் கவனிப்பையும் வழங்க வடமாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே இத்தகைய மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்கள் பின்வரும் வைத்தியசாலைகளில் உரிய வைத்திய அதிகாரிகளைச் சந்தித்து தமக்கான ஆலோசனைகளையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும். மருத்துவ ஆலோசனைகளை பெறவிரும்புவோர் மாவட்ட வைத்தியசாலைகளிலுள்ள வரவேற்பாளரை அணுகி மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முதற்கட்டமாக எதிர்வரும் 02.09.2016 வெள்ளிக்கிழமை மற்றும் 09.09.2016 வெள்ளிக்கிழமை ஆகிய திகதிகளில் பின்வரும் வைத்தியசாலைகளில் இம் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குச் சமுகமளிக்கமுடியும்.
மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி  – பி.ப. 4 மணி:
மாவட்ட பொதுவைத்தியசாலை, முல்லைத்தீவு- மு.ப 8 மணி:
மாவட்ட பொது வைத்தியசாலை, வவுனியா     – பி.ப. 1 மணி:
மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார்       – மு.ப 8 மணி:
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்        – பி.ப. 1 மணி

ad

ad