புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2016

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்  என்றும் உத்தரவிட்டுள்ளது. காவிரி கண்காணிப்புக் குழுவை 3 நாட்களுக்குள் தமிழக அரசு அணுக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கர்நாடக அரசு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 62 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் வைத்துள்ளதால் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலி நாரிமனும் ஆஜராகினர். 

நடுவரி மன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதில்லை என்றும், சம்பா சாகுபடிக்காக உடனடியாக 50 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அரசு மழை பொய்த்துவிட்டதை காரணமாக கூறியது. 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மனிதாபிமான அடிப்படையில் நீரைத் திறந்துவிட வேண்டும் என்றும், வாழு வாழவிடு என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும், எவ்வளவு தண்ணீரை திறக்க முடியும் என்பதை திங்கள்கிழமை தெரிவிக்கவும் உத்தரவிட்டனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

ad

ad