புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2016

முதல்வர் ஜெயலலிதா மயக்கமடைந்த 'அந்த' நிமிடங்கள்! -கதிகலங்கிய கார்டன் ஊழியர்கள்

மிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 'நேற்று இரவு கார்டனில் நடந்த
ஆலோசனையின் விளைவாகவே, முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது' என்கின்றனர் கார்டன் உதவியாளர்கள்.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று நள்ளிரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், திடீர் காய்ச்சலின் காரணமாகவும், உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள் எனத் தெரிவித்தது. இதையடுத்து, மருத்துவமனை வாயிலில் தொண்டர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். 




"முதல்வரின் உடல்நிலையில் எந்த ஒரு சிரமம் ஏற்பட்டாலும், டாக்டர் சிவகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் போயஸ் கார்டனிலேயே வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். வெளியில் சென்று சிகிச்சை அளிக்கும் அளவுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதற்குக் காரணமே, நேற்று நடந்த விவாதங்கள்தான்" எனக் கலங்கினார் கார்டன் உதவியாளர் ஒருவர். அவர் நம்மிடம், "முதல்வருக்கு சர்க்கரை குறைபாடு, மூட்டு பிரச்னை என உடல்ரீதியாக பல பிரச்னைகள் உள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, அமெரிக்க மருத்துவர்கள் குழுவினர் முதல்வருக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பொது இடங்களுக்குச் செல்லும்போதெல்லாம், மிகுந்த கவனமாகவே இருப்பார். நேற்று மாலை கார்டனுக்குள் இருந்த முதல்வருக்கு, டெல்லியில் இருந்து சில தகவல்கள் வந்துள்ளன. 
டெல்லி தகவலால் கவலையில் ஆழ்ந்தார் முதல்வர். அதன்பின்னர் சசிகலா மற்றும் அரசு செயலர்களுடன் தீவிரமாக விவாதித்தார். அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருந்தார். மிகுந்த மனஅழுத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தார். நீர்ச்சத்து குறைபாட்டோடு சர்க்கரை அளவும் குறைந்துவிட்டது. லேசான காய்ச்சலும் இருந்தது. தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை அறிந்த சசிகலா உள்ளிட்டவர்கள், பதறிப் போய் உடனடியாக அப்பல்லோ மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.

வழக்கமாக, ஒவ்வொரு புதன்கிழமையும் சிறுநீரகம் தொடர்பான பரிசோதனையை முதல்வர் மேற்கொள்வது வழக்கம். தொடர்ச்சியான பணிகளின் காரணமாக, இந்த வாரம் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. அதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. உடல்ரீதியான அனைத்து பரிசோதனைகளும் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்ததால், தொண்டர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், முதல்வர் இப்போது நன்றாக இருக்கிறார். விரைவில் முழு நலத்தோடு இயல்புக்குத் திரும்புவார்!" என்றார் ஆசுவாசமாக.

ad

ad