புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2016

சிங்கள இனச்சுத்திகரிப்பை கட்டவிழ்த்துள்ளாராம் விக்கினேஸ்வரன்-விமல் வீரவன்ச கூறுகிறார்

எழுக தமிழ் பேரணியின் ஊடாக சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனே கட்டவிழ்த்து விட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
 
நல்லிணக்க செயன்முறைகளை குழிதோண்டிப் புதைத்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனை இனவாதி என்றும், எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் நடுநிலைவாதி எனவும் தெற்கு அரசியல்வாதிகள் அறிமுகப்படுத்தினாலும் அவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்திருக்கின்றார்.
 
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விமல் வீரவன்ச,  எழுக தமிழ் பேரணி மற்றும் அதில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை குறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

முக்கியமாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது எழுக தமிழ் உரையில் குறிப்பிட்ட வடக்கில் தீவிரமடைந்துள்ள சிங்களமயமாக்கல், இராணுவ முகாம் விஸ்தரிப்பு, புத்தர் சிலைகளும், பௌத்த கலாசாரங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் பகிரங்கமாக திணிக்கும் முயற்கிள் போன்றவற்றுக்கு எதிரான கருத்துளை இனவாத கருத்துக்கள் என்றும் சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பிற்கான முயற்சி எனவும் விமல் குற்றம்சாட்டினார்.
 
இதுகுறித்து விமல் வீரவன்ச மேலும் தெரிவிக்கையில், ஒரு பக்கம் மங்கள சமரவீர விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் பின்னிப்  பிணைந்து உறவாடும் வேளையில் மறுபக்கம் உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மக்களிடையேயும், சிங்கள மக்களிடையேயும் கட்டப்பட்டுவரும் நல்லிணக்கத்துடனான ஐக்கிய சூழலை கொன்றுவிட்டு சிங்கள மக்களையும், பௌத்த கலாசாரத்தையும் அருவருப்பான விடயமாக எடுத்துக்காட்டி அப்பாவித் தமிழ் மக்களை இனவாதப் பாதையில் இட்டுச் செல்கின்றார்.
 
அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்காக உயிர்நீத்த திலீபனின் திருவுருவப் படத்தை யாழ்ப்பாணத்தில் வைத்து நினைவுகூருகின்றார்கள்.
 
வடக்கில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் குடியேற வேண்டாம் எனக் கூறுகிறார்கள்.
 
இன்னும் தெளிவாகக் கூறினால் இவை சிங்கள இனச் சுத்திகரிப்பாகும். இதுவொரு பாசிசவாத வெளிப்பாடாகும். இந்தப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்களை குடியேற்ற வேண்டாம் என எங்களால் கூறமுடியாது.
 
அதேபோல சிங்கள மக்களைக் குடியேற வேண்டாம் என்றும் எவராலும் கூறமுடியாது. அப்படிப்பட்ட எண்ணத்தில் யாராவது இருந்தால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுவொரு நோயாகும்.
 
வடக்கு தமிழருக்கே சொந்தமானது. அதனால் வேறு இனத்தவர்கள் குடியேற முடியாது என்ற எண்ணக்கருவை விதைக்கும் சுதந்திரம் தற்போதைய நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் ஆட்சியிலேயே வழங்கப்பட்டுள்ளது.
 
விக்னேஸ்வரனின் இனவாதம், சம்பந்தனின் நடுநிலைவாதம் என்ற இரண்டு விதமான கூற்றை தெற்கு அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். எனினும் விக்னேஸ்வரனோ, சம்பந்தனோ, சுமந்திரனோ அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே உள்ளனர்.
 
இலங்கைக் குடியுரிமை உள்ள தமிழர் ஒருவரது புகலிடக் கோரிக்கையை அண்மையில் நிராகரித்த கனேடிய நீதிமன்றம், அரசியல் தஞ்சத்தை நிராகரித்தமைக்கான காரணத்தையும் தெரிவித்திருந்தது.
 
அதாவது, குறித்த பிரஜை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டிருக்கின்றார் என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த இயக்கத்தின் கிளையெனவும் கூறியிருக்கிறது. 

இதுதான் கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு. வெளிநாட்டு நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்திருந்தாலும்  அரசாங்கம் அவ்வாறு தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ad

ad