புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2016

டெல்லியில் 'எய்ம்ஸ்' தமிழக மாணவர் சரவணன் விஷ ஊசி போட்டு கொலை- பிரேத பரிசோதனை அறிக்கையில் 'திடுக்'-

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க
வாய்ப்பில்லை; விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த மாணவர் சரவணன் எம்.டி., படிப்பில் சேர்ந்து படித்தார். அவர் கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி மர்மமான முறையில் தனது அறையில் கிடந்தார்.
முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது பெற்றோர்களும் உறவினர்களும் வலியுறுத்தினர்
டெல்லி கோர்ட்டில் வழக்கு
இதனிடையே சரவணனின் தந்தை கணேசன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எனது மகன் சரவணன் கொலை செய்திருக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது மரணம் குறித்த உடற்கூறு பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை தொடர்பான தகவல்களை டெல்லி போலீசிடம் கேட்டும் தரவில்லை. இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் உண்மையை மறைக்க முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே போலீஸ் துணை ஆணையர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.
மத்திய அரசுக்கு உத்தரவு
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.பாதக் முன்னிலையில் செப்டம்பர் 3-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான பதிலை 4 வாரத்தில் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கும், டெல்லி போலீசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
நவ.10க்கு ஒத்திவைப்பு
மேலும் சரவணனின் உடற்கூறு அறிக்கை, முதல் தகவல் அறிக்கை நகல்களை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விஷ ஊசி போட்டு கொலை
இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவர் சரவணன் தற்கொலை செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விஷ ஊசியானது மருத்துவம் தெரிந்த ஒருவராலே செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad