புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2016

முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ஐ.நா செயலாளரிடம் கொடுத்தேன்: சீ.வி.விக்னேஷ்வரன்



வடமாகாணத்தில் போர்க் காலத்திலும், போர் நிறைவடையும் காலப்பகுதியிலும் காணாமல்போன 4 ஆயிரம் பேருடைய தகவல்கள் அடங்கிய ஆவணத்தையும், படையினர், கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸார் ஆகியோருடைய கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களுடைய நிலங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணத்தையும் உள்ளடக்கி சில முக்கிய ஆவணங்களை பான் கீ மூன் கையில் கொடுத்திருக்கிறேன்.
மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
யாழ்.குடாநாட்டுக்கு நேற்றைய தி னம் விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூன் யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசியிருந்தார்.
மேற்படி சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு சந்திப்பு தொடர்பாக கூறும்போதே முதலமைச்சர் மேற்படி விடயத்தை கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திப்பதற்காக சுமார் 1 மணி நேரம் காத்திருந்த பின்னர் செயலாளர் நாயகத்தை சந்தித்து பேச வேண்டாம். கைலாகு கொடுத்து விட்டு விடைபெறலாம் என கேட்டார்கள்.
ஆனால் நாம் பேசவேண்டும் என நான் கேட்டதற்கு அமைய 6 நிமிடங்கள் கொடுத்தார்கள்.
இவ்வாறுதான் நடக்கும் என்பது எனக்கு முன்னதாகவே தெரியும் என்பதால் சில விடயங்களை மேலோட்டமாக பேசிவிட்டு அவற்றுக்கான ஆவணங்களை கொடுக்கலாம் என்ற அடிப்படையில் சகல ஆவணங்களையும் தயார்படுத்தி கொண்டு சென்றேன்.
குறிப்பாக போர் நடைபெற்றபோதும், போர் நிறைவடையும் காலப்பகுதியிலும் காணாமல்போன சுமார் 4 ஆயிரம் வரையிலானவர்களின் பெயர்கள், தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை புத்தக வடிவில் தயாரித்து அவருக்கு கையளித்திருக்கின்றேன்.
இதேபோல் வடமாகாணத்தில் படையினர், கடற்படையினர், விமானப்படையினர், மற்றும் பொலிஸாருடைய கட்டுப்பாட்டின் கீழ் எத்தனை மக்களுக்கு சொந்தமானஎவ்வளவு நிலங்கள்? உள்ளன என்ற தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்றையு ம் தயாரித்துச் சென்று வழங்கியிருக்கின்றேன்.
இதனை விடவும் மிக முக்கியமான விடயங்கள் அல்லது பிரச்சினைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் சிலவற்றையும் வழங்கியிருக்கின்றேன்.
எனக்கு போச கொடுக்கப்பட்ட நேரம் 6 நிமிடங்கள். ஆனால் செயலாளர் நாயகம் 10 நிமிடங்கள் பேசினார் என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

ad

ad