புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2016

ராம்குமார் தந்தை மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு


ராம்குமார் பிரேத பரிசோதனை விவகாரத்தில் தந்தை பரமசிவத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமார் புழல் சிறையில் கடந்த 18ஆம் தேதி மின்சார ஒயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகச் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய, தந்தை பரமசிவம், பிரேதப் பரிசோதனைக்குத் தாங்கள் விரும்பும் மருத்துவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் எனக் கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் வெவ்வேறு முடிவுகளைத் தெரிவித்ததால் மூன்றாவதாக விசாரித்த நீதிபதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். இதை ஏற்க மறுத்த பரமசிவம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரித் தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தை அணுக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனைத்தொடர்ந்து, ராம்குமார் பிரேதப் பரிசோதனையின்போது தங்கள் சார்பில் தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்றும், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பரமசிவம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தனியார் மருத்துவரை அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். எய்ம்ஸ் மருத்துவரை சேர்த்து அக்டோபர் 1ஆம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. 

ad

ad