புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2016

பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்க ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் உள்ள சகல இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கையொன்றை அமுல்படுத்த
அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது செயற்பட்டு வரும் இணையத்தளங்களை கணக்கிட முடியாதுள்ளது, அரச நிறுவனங்கள், அமைச்சு, தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு மட்டத்திலும் ஆயிரக்கணக்கில் இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்றன.
சில இணையத்தளங்கள் ஊடக சுதந்திரம், ஊடக ஒழுங்கு என்பவற்றை மீறிச் செயற்படுவதாக அரச தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
எனவே இவ்வாறான நடவடிக்கைகளைக் மட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்கி விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad