புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2016

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி யாழில் சிறந்த துடுப்பாட்டகழகமாக தெரிவு

யாழ் மாவட்டத்தின் 2016ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட கழகமாக கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி தெரிவு செய்யப்பட்டது. யாழ் மத்திய விளையாட்டுக் கழகத்தின் தெரிவுக்குழுவினால் இத்தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. 

01.01.2016 தொடக்கம் 31.07.2016 வரை நடைபெற்ற ' GEORGE WEBSTER TROPHY ' 140 போட்டிகளில் வெற்றியீட்டிய புள்ளிகளின் அடிப்படை யில் குறித்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்தவகையில், 19 போட்டிகளில் பங்குபற்றி 14 வெற்றிகளைப் பெற்று 107.42 புள்ளிகளுடன் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி தரவரிசையில் முதலாவது இடத்திலும், 17 போட்டிகளில் பங்குபற்றி 14 வெற்றிகளைப் பெற்று 103.25 புள்ளிகளுடன் தரவரி சையில் இரண்டாவது இடத்தினை சென்றலைற்ஸ் விளையாட்டுக்கழகம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad