புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2016

நல்லாட்சி அரசின் குற்றச்சாட்டுக்களால் மகிந்தவிற்கு வருகிறதாம் சிரிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமைகள், தன்மீது சுமத்தி வருகின்ற குற்றச்சாட்டுக்களைக் கேட்கும் போது, தனக்கு சிரிப்பு வருவதாக,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் அலுவலகத்தில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் 
'ஜனாதிபதித் தேர்தலை, எதற்காக முற்கூட்டியே நடத்தினீர்கள் என்று, தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள், என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். எனக்கு முன்னர், இந்த நாட்டில் ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகள், முற்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்திய வரலாறு உண்டு. அதன் பிரகாரமே நானும், முற்கூட்டியே தேர்தலை வைத்தேன். என்னுடைய ஆட்சிக் காலத்தில், பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டிருப்பின், அது தொடர்பில், அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. இதுபற்றி, தற்போது நாட்டை ஆட்சி செய்யும், முன்னாள் அமைச்சரவை அமைச்சருக்குத் தெரியாதா?
இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்களின் மனங்களில் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளவே, இந்த அரசாங்கம் முயன்று வருகின்றது. 2015ஆம் ஆண்டில், பொருளாதாரம் உடைந்துவிழும் என்று தெரிந்துகொண்டுதான், ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியதாகவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் அனைவரும் அறிந்துகொள்ள முன்னர், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவே நான் முயன்றதாகவும், ஊடகங்கள் வாயிலாக, இந்த அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றது
தங்களுடைய இயலாமையைக் மறைத்துக்கொள்வதற்காக, என்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஜோதிடரின் பேச்சையும் திறைசேரியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் பேச்சையும் கேட்டுக்கொண்டே, தேர்தலை நடத்தியதாகவும் கூறுகின்றார்கள். இவ்வாறான கதைகளைக் கேட்கும் போது, எனக்குச் சிரிப்புத்தான் வருகின்றது.
எனக்கு முன்னர் ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளும், ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்திய வரலாறுகள் உள்ளன. 1982இல் ஜே.ஆர்.ஜயவர்தனவும் 1999இல், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், ஜனாதிபதித் தேர்தல்களை முன்கூட்டியே நடத்தியவர்களாவர்' என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

ad

ad