புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

போர்த்துக்கலை வென்றசுவிஸ் அணிதரவரிசையில்முன்னேறும்

32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து 13 அணிகள் உலக கோப்பைக்கு தகுதி பெறும். இதற்கான தகுதி சுற்றுகள் தொடங்கி விட்டன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி அளித்தது. சுவிட்சர்லாந்து அணியில் பிரீல் எம்போலோ (24-வது நிமிடம்), அட்மிர் மிமிதி (30-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். போர்ச்சுகல் அணியில் காயம் காரணமாக கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ்-பெலாரஸ் (0-0), நெதர்லாந்து-சுவீடன் (1-1) ஆகிய ஏ பிரிவு லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து 13 அணிகள் உலக கோப்பைக்கு தகுதி பெறும். இதற்கான தகுதி சுற்றுகள் தொடங்கி விட்டன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி நேற்று முன்தினம் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி அளித்தது. சுவிட்சர்லாந்து அணியில் பிரீல் எம்போலோ (24-வது நிமிடம்), அட்மிர் மிமிதி (30-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். போர்ச்சுகல் அணியில் காயம் காரணமாக கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ்-பெலாரஸ் (0-0), நெதர்லாந்து-சுவீடன் (1-1) ஆகிய ஏ பிரிவு லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

ad

ad