புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2016

மாலி யில் ஐ நா படையில் சேர வந்த வாய்ப்பை நிறுத்தியது ஐ நா

மாலி நாட்டில் அதிகரித்துள்ள பயங்கரவாத செயல்கள் காரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும்
படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட வாய்ப்பை ஐ.நா அமைப்பு இரத்துச் செய்துள்ளது.
வாய்ப்பு வழங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் இலங்கை இராணுவத்தினரை மாலி நாட்டுக்கு அனுப்ப தவறியமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை எகிப்திய இராணுவத்தினருக்கு வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட இராணுவ கேர்ணல் ஒருவர் தலைமையில் இராணுவ அதிகாரிகள் உட்பட 630 படையினரை மாலி நாட்டுக்கு அனுப்பி வைக்க இலங்கை இராணுவம் தீர்மானித்திருந்தது.
இதனடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் முதல் இராணுவத்தினருக்கு விசேட பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மாலி இராணுவ நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் செக் குடியரசு மற்றும் ரஷ்யாவிடம் கடன் அடிப்படையில் போர் தளபாடங்களை கொள்வனவு செய்ய முயற்சித்தது.
இந்த நாடுகள் போர் தளபாடங்களை வழங்க மறுத்தமையே அங்கு இராணுவத்தினரை அனுப்பி வைக்க முடியாமைக்கான பிரதான காரணம் என கூறப்படுகிறது.

ad

ad