புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2016

பிரச்சினைகளைத் தீர்க்க ஐ.நா செயலரிடம் காலஅவகாசம் கேட்ட ஜனாதிபதி

நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என, தான் விடுத்த கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா நேற்று, குருநாகலில் இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு ஜனாதிபதி தனதுரையில் மேலும் , எதிர்வரும் வருடத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னமான கைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

எனவே, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த, இக் கட்சியுடன் இணைந்துள்ள, இணையப் போகின்ற அனைத்து கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

அத்துடன், நாம் எவ்வளவோ தோல்விகளைச் சந்தித்துள்ளோம், வெற்றிகளைப் போலவே தோல்வி பற்றியும் சிந்திக்க வேண்டும், கட்சி செய்ய வேண்டியது என்ன, தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்பது போலவே, கட்சித் மற்றும் கட்சித் தலைவர்கள் செய்யக் கூடாதது எது என்பது பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என, அவர் கூறியுள்ளார். 

பண்டா - செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி - செல்வா ஒப்பந்தங்களுக்கு சிலர் இடமளிக்கவில்லை, இதன் பலனாக பாரிய யுத்தம், இந்திய இராணுவத்தினரின் வருகை, 13ஆவது திருத்தச் சட்டம் என்பன நாட்டுக்குள் வந்தன. நாம் முதலில் செய்ய வேண்டியதை முன்னரே செய்திருந்தால் இந்த பாரிய பேரழிவு நடந்திருக்காது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

இதேவேளை நாம் இப்போது செய்யவுள்ளதையும் சிலர் விமர்சனம் செய்கின்றனர் என குறிப்பிட்ட ஜனாதிபதி, தர்மபால அன்று சிங்களவர்களாக எழுவோம் என்றார், இன்று நான் நாட்டு மக்களின் சேவகனாக சொல்கிறேன் இலங்கையர்களாக எழுவோம் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை தான் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றது மீண்டும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்கவே எனவும் அவர் கூறியுள்ளார். 

அத்துடன் இந்த நிகழ்வு அதன் முதல் படி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ad

ad