புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2016

சிறுமியை துன்புறுத்திய தாயாருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – கோப்பாய் நீர்வேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடுமையாக தாக்கி துன்புறுத்திய அவரது தாயாரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை தாக்குதலுக்கு உட்படுத்திய தாயாரை இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் அ. அருமைநாயகம் உத்தரவிட்டார்.  

கோப்பாய் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி உட்பட அவர்களின் மூன்று பிள்ளைகளையும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறும் சிறுமியின் தந்தை யை விசாரணைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.  

அத்துடன், சிறுமி தாக்குதலுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய காணொளியை மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறும் நீதிபதி அ. அருமைநாயகம் உத்தரவிட்டார்.  

கோப்பாய் - நீர்வேலிப் பகுதியில் நேற்று காலை சிறுமியொருவர் அவரது தாயினால் தாக்க ப்படுகின்ற சம்பவத்தை அருகிலுள்ள இளைஞர் ஒருவர் காணொளியில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்தக் காணொளி போப்பாய் பொலிஸ் நிலையம் வரை சென்ற நிலையில் சிறுமியின் சிறிய தாயை கைது செய்த பொலிஸார், இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை ப்படுத்தி னர்.இதன்போது குறித்த சிறுமி சார்பாக 6 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

தாக்குதலுக்குள்ளான சிறுமி, தாக்குதல் நடத்தி துன்புறுத்திய பெண்ணின் பிள்ளை என நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

ad

ad