புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2016

டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது.
முன்னதாக சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது அரையிறுதியில் சூப்பர் கில்லீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சரவணன் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக தொடக்க வீரரான கோபிநாத் 33 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் குவித்தார்.
கோவை தரப்பில் விக்னேஷ், ஹரிஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
கோவை தோல்வி: பின்னர் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், ஸ்ரீனிவாசன் 27 ரன்களும், அனிருத் 23 ரன்களும், தருண் ஸ்ரீனிவாஸ் 21 ரன்களும் எடுத்தனர்.
சூப்பர் கில்லீஸ் தரப்பில் அந்தோணி தாஸ் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், அலெக்சாண்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

ad

ad