புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2016

பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்



பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


பிரேசிலி்ல் இன்று ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா கலந்து கொண்டார். இதில் அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். எப்ஃ46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்துள்ளார். சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் ஜஜாரியாவின் இடது கை அகற்றப்பட்டது என தெரியவந்துள்ளது. டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேவேந்திர ஜஜாரியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இராஜஷ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜஜாரியா 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஈட்டி எறிதல் பிரிவில் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார். அதன் பின்னார் நடைபெற்ற இரண்டு பாராலிம்பிக் போட்டிகளில் 46 கிலோ ஈட்டி எறிதல் போட்டியில் இடம் பெறததால் ஜஜாரியாவும் பங்ககேற்கவில்லை. இதன் இடையில் தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் அதிக தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். அவரது சாதனைகளை அங்கிகரிக்கும் வகையில் மத்திய அரசு ஜஜாரியாவுக்கு பத்மஸ்ரீ மற்றும் அர்ஜீனா விருதுகளை வழங்கி கவுரவித்தது.

ad

ad