புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2016

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் நாளையதினம் யாழ்.சிறைக்கு

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பல அரசியல் கைதிகள் நாளையதினம் (சனிக்கிழமை) யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவு ள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 21ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் கரு த்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும், அவ்வாறு குற்றச்சாட்டுகள் இன்றேல் விடுதலை செய்யுமாறும் கோரி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

அவர்களின் விடுதலை நீதிமன்றத்திற்கு பொறுப்பான விடயம் என்பதால், தம்மால் இது குறித்த எதனையும் மேற்கொள்ள முடியாது. எனினும் இன்றையதினம் அரசியல் கைதி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பல அரசியல் கைதிகள் நாளையதினம் யாழ். சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களின் உறவினர்களை சந்திக்க வசதி ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்களின்படி, அனைத்து கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

ad

ad