புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

காவிரி பிரச்சனைக்காக போராட்டம்? நடிகர் சங்கத்தில் நாளை முடிவு

தென் இந்திய நடிகர் சங்கத்தின் 11-வது செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.  

கூட்டத்தில் காவிரி பிரச்சனையில், தமிழகத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதில் நடிகர் சங்கம் சார்பில் கர்நாடகத்துக்கு எந்த வகையில் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது பற்றியும் முடிவு செய்யப்படுகிறது. காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதா? உண்ணாவிரதம் இருப்பதா? அல்லது எந்த முறையில் கர்நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

நடிகர் சங்கத்தில் அடுத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

ad

ad