புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2016

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் யோஷித்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் யோஷித்த ராஜபக்ச தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

யோஷித்த ராஜபக்ச தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்று நீதிமன்றத்திற்கு சமுகமளிக்க முடியவில்லையெனவும் அவரது சட்டத்தரணி நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து யோஷித்த ராஜபக்சவின் கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் 22 ஆம் திகதி பதிலளிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி A.A.R. Heyiyanthuduwa  உத்தரவிட்டுள்ளார்.

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவன நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு மார்ச் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட யோஷித்த ராஜபக்சவின் கடவுச் சீட்டினை கடுவலை நீதவான் நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad