புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2016

கேள்விக்குள்ளாகியுள்ள மாவட்ட இணைத்தலைமை பதவி -அனந்தி சசிதரன்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தும்போது, அதுகுறித்து வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடாமல்
பிரதேச செயலாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் மக்கள் பிரதிநிதிகளான தம்மையும் உதாசீனப்படுத்துவதாகவும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வட மாகாணசபை அமர்விலேயே அனந்தி மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கடந்த மாவட்ட ஒருக்கிணைப்புக் குழு கூட்டங்களை வைத்து பார்க்கும்போது, வடக்கு முதல்வருக்கு இணைத்தலைவர் பதவி பெயருக்காகவா வழங்கப்பட்டதென்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அனந்தி குறிப்பிட்டார்.
அத்தோடு, அண்மையில் தாம் காரைநகர் கூட்டத்திற்கு சென்றிருந்தபோது அதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தின் அறிக்கைகள் வாசிக்கப்படாமல், அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடாமல் புதுவிதமாக இடம்பெற்றதாகவும், முதலமைச்சர் சார்பில் சென்றிருந்த மாகாண அமைச்சர்களும் வெறும் பார்வையாளர்கவே அங்கு அமர்ந்திருந்ததாகவும் அனந்தி குற்றஞ்சாட்டினார்.
அன்றைய கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான தாம் புறந்தள்ளப்பட்டு, தான்தோன்றித்தனமாகவே சகல விடயங்களும் நடந்தேறியதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அனந்தி குறிப்பிட்டார்.
அத்தோடு, இணைத்தலைவர் பதவி குறித்து வடக்கு முதல்வர் மத்திய அரசுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமெனவும் அனந்தி குறிப்பிட்டார்.

ad

ad