புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2016

உயிரிழந்த குழந்தையின் உடலுடன் கதறிய தாய் : விசாரிக்க கோர்ட் உத்தரவு

உத்திரப்பிரதேச மாநிலம், பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்ரனா. இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை வயது மகளான குல்நாதை மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்துவிட்ட துயரம் ஆறாமல் தாய் அழுது கொண்டிருந்தநிலையில் குழந்தையின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் 2,500 ரூபாய் கேட்கப்பட்டது. 

அதை கொடுக்க அவரிடம் பணம் இல்லை. இதனால் இரவு முழுவதும் ஆஸ்பத்திரி வளாகத்தில் மகள் உடலுடன் இம்ரனா இருந்தார். மறுநாள் காலையில் சிலரின் உதவியால் ஆம்புலன்ஸ் மூலம் மகளின் உடலை ஊருக்கு இம்ரனா கொண்டு சென்றார். இந்த தகவல் வெளியானதை அறிந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டு இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சிலநாட்களுக்கு முன்தான் அம்மாநிலத்தில் மேல்சிகிச்சைக்காக மகனின் உடலை ஆஸ்பத்திரியில் உள்ள மற்றொரு பிரிவுக்கு தோளில் தூக்கி சென்றபோது, மகன் தோளிலே இறந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ad

ad