புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

சர்வதேச அமைதிகாக்கும் பணிக்கு இலங்கையின் ஒத்துழைப்பை பாராட்டுகிறார் மூன்

சர்வதேச அமைதிகாக்கும் பணிக்கு இலங்கை வழங்கியுள்ள ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு லண்டனில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கல் பலோனின் தலைமையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப் பிரிவுக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் ஒத்துழைப்புகள் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் இலங்கை சார்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பங்கேற்றிருந்தார்.

ad

ad