புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2016

நெருப்போடு விளையாடாதீர்கள் : வைகோ ஆவேசம்





தமிழத்திற்கு ஆதரவு தெரிவித்துது முகநூலில் கருத்து தெரிவித்த தமிழக இளைஞர் கன்னடகர்ளால் தாக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது. தேசிய ஒருமைப்பாட்டிற்கே தீங்கு விளைவிக்க கூடிய செயல் என புதுக்கோட்டையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு பக்கபலமாக உள்ளது. வெளிப்படையாக அனுமதி அளிக்காவிட்டாலும்  அணை கட்டுப்படுவது உறுதியாகிவிடட்து. 

கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 15ஆயிரம் கனஅடி நீர் அளிக்காhமல் கண்துடைப்பிற்காக தற்போது அணையை திறந்த விட்டுள்ளனர். கர்நாடகாவில் மாநிலம் தழுவிய பந்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது என்ற போர்வையில்; கர்நாடகா மாநில அரசே மறைமுகமாக பந்தை நடத்தியது. இதில் தமிழக முதல்வரரின் உருவபொம்மையை எரித்து பாடை கட்டி போராட்டம் நடத்தியது கண்டனத்திற்கு உரியது. மத்திய அரசையும் தமிழக அரசையும் கர்நாடாக அரசு ஏமாற்றி வருகிறது. கர்நாடாகவில் ஆட்சிக்க வர வேண்டும் என்பதற்காக தான் அரசியல் லாபத்திற்காக மத்தியில் ஆண்ட காங்கிpரஸ் அரசம் தற்போது ஆண்டு வரும் பாஜக அரசம் காவிரி மேலாண்மை வாரரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

கேரளம் ஒருபக்கத்தில் வஞ்சிக்கிறது. கர்நாடாகம் மறு பக்கத்தில் வஞ்சிக்கிறது. ஆந்திரம் வஞ்சிகிறது. சிங்கள அரசு மீனவர்களை வஞ்சிறது. தமிழக முதல்வர் முல்லை பெரியார் பிரச்னையிலும் காவிரி பிரச்னையிலும் முறையாக உச்சநீதிமன்றத்தை அணுகி முறையான நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்றைக்கு உள்ள நிலையில் கர்நாடகம் ஒட்டுமொத்ததமாக ஓரணியில் உள்ளது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டார்கள். ஆனால் தமிழகம் பிளவு பட்டுள்ளது என்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்;படுத்தி விட்டார்கள். எனவே தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டதத்தை நடத்தி ஒரு முடிவு எடுத்து  பிரதமரைர சந்தித்து அழுதத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது பிpரதமர் நியாயமாக நடந்து கொள்வார் என்பதற்காக அல்ல எதிரும் புதிருமாக உள்ள அதிமுக திமுக கட்சிகள் ஓரணியில் உள்ளது என்பதை நிருபிப்பததற்காக தான். 

தொடர்ந்து கர்நாடகம் முறைதவறி நடக்கிறது. தமிழகம் பொறுமையாக உள்ளது. பொறுமைக்கும் எல்லை உள்ளது. தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு செய்த தமிழ்; இளைஞர் ஒருவர் கர்நாடகாவில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்திற்கு உரியது. கர்நாடகா முதல்வர் நெருப்போடு விளையாடுகிறார். அங்குள்ள தமிழகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க  வேண்டியது கர்நாடாக அரசம் மத்திய அரசும் தான். அந்த இளைஞர் மீது விழுந்த ஒவ்வொரு அடியுமம்  தேசிய ஒருமைபாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளது.

ad

ad