புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2016

சுகாதாரமான திடல் கழிவு நிலநிரப்புகைத் திட்டத்தில் யாழ்ப்பாணம் தெரிவு

யாழ் கல்லுாண்டாய் திறந்தவெளியில் கழிவுகள் வீசப்படுவதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக சுகாதார நிலநிரப்பி திட்டம் தீர்வாக அமையுமென வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஜங்கரநேசன் தெரிவித்தார்.  

யாழ். நூலகத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற சுகாதார நிலநிரப்புகைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், 

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கழிவகற்றல் என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளது. நாள்தோறும் வீதிகளில் கழிவுகள் குவிந்தவண்ணமுள்ளன. இதற்கு தீர்வாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் “சுகாதாரமான திடல் கழிவு நிலநிரப்புகைத் திட்டம்” ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

இலங்கையில் அநுராதபுரம், ஹிக்கடுவ, மிதிலகிரிய, யாழ்ப்பாணம் என  நான்கு இடங்கள் இத்திட்டத்திற்கு தெரிவுசெய்யப்படுகின்றன என தெரிவித்தார். 

யாழ். மாவட்டத்தில் கீரிமலைப் பிரதேசத்தில் சுண்ணாம்புக்கற்கள் அகழ்ந்த குழிகள் இருப்பதால் இத் திட்டத்திற்கு கீரிமலைப் பிரதேசம் தெரிவு செய்யப்பட்டதாக கூறியவர்  
இத்திட்டத்தின் மூலம் நாள் ஓன்றிற்கு 50 தொன் திண்மக்கழிவுகள் நிலநிரப்புகை செய்யலாம் என தெரிவித்ததுடன்  50 தொன் திண்மக் கழிவுகள் நாள் தோறும் பெறப்பட்டால் 15 வருடங்களின் பின்னே இக்குழிகள் முழுமையாக நிரம்பப்படும். 

திண்மக் கழிவுகள் கொட்டப்படும் குழியானது மூன்று படையமைப்புக்களாக அமைக்கப்பட்டதன் பின்னரே திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். திண்மக் கழிவுகளிலிருந்து வெளிவரும் ஊனம் போன்ற திரவம் நிலத்தடி நீருடன் கலக்காத வண்ணம் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

குறித்த திட்டங்கள் யாவும் 2018 ஆம் ஆண்டு இறுதியாண்டில் நிறைவேற்றப்படுமெனவும் இதனால் கல்லுாண்டாய் திறந்தவெளியில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

ad

ad