புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2016

கான்பூர் டெஸ்ட்..! ஜடேஜா, அஸ்வின் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து

கான்பூரில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்
இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 262 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் சுழல் பந்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூஸிலாந்து அணி சுருண்டது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ராகுல்- முரளி விஜய் களம் இறங்கினர். இந்த ஜோடி 42 ரன்கள் சேர்ப்பதற்குள் பிரிந்தது. ராகுல் 32 ரன்னில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து புஜாரா களம் இறங்கினார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து ரன்கள் எடுத்தது. 8வது அரை சதம் கடந்த புஜாரா 62 ரன்னில் வீழ்ந்தார். பின்னர் கேப்டன் கோலி, விஜயுடன் ஜோடி சேர்ந்தார். சில நிமிடங்களே தாக்குப்பிடித்தது இந்த ஜோடி. 9 ரன்னில் கோலி வெளியேற, ரஹானே விளையாட வந்தார். இந்த ஜோடியும் அதிக நேரம் நிற்கவில்லை. 13வது அரை சதத்தை கடந்த முரளி விஜய், சோதி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பின்னர் 18 ரன்னில் ரஹானே வெளியேற, ரோகித் சர்மா- அஸ்வின் ஜோடி ரன்களை உயர்த்தியது.
35 ரன் எடுத்திருந்த ரோகித் சர்மா, சன்ட்நேர் பந்தில் வீழ்ந்தார். மறுமுனையில் நன்றாக விளையாடிய அஸ்வின் 40 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆல்ரவுண்டரான ஜடேஜா 42 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை. முடிவில் இந்திய அணி 318 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.
நியூஸிலாந்து தரப்பில் போல்ட், சன்ட்நேர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், வாக்னர் 2 விக்கெட்டும், கிரைக், சோதி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் குப்தில் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து லதம்- வில்லியம்சன் ஜோடி அபாரமாக விளையாடி 124 ரன்கள் குவித்தது. நேற்று 2வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நியூஸிலாந்து அணி தனது ஆட்டத்தை தொடர்ந்தது. இந்த ஜோடி அபாரமாக விளையாடி அரை சதத்தை கடந்தது.  58 ரன்கள் எடுத்திருந்த லதம், அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். லதம் 5 பவுண்டரிகள் விளாசினார். பின்னர் வந்த டெய்லர் டக் அவுட் ஆனார். இவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். தொடர்ந்து விளையாடிய சன்டநேர் 32 ரன்னிலும், வாட்லின் 21 ரன்னிலும் வீழ்ந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் நியூஸிலாந்து அணி 262 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.
இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். யாதவ் 1 விக்கெட் எடுத்தார். இதையடுத்து, 56 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜயும், ராகுலும் களம் இறங்கினர். 38 ரன்னில் ராகுல் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து விஜயுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் அடித்து விளாசினர். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 64 ரன்னிலும், புஜாரா 50 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 4வது நாள் ஆட்டம் தொடர்கிறது

.

ad

ad