புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

விச ஊசி விவகாரம் தொடர்பில் வட மாகாண மருத்துவர் மன்றம் ஆராயும்

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் உதயமாகும் வட மாகாண மருத்துவர் மன்றம் ஆராய்ந்து சாதகமான முடிவுகளை எட்டும் என்று அம்மன்ற த்தில் தலைவர் வைத்தியர் ப.அச்சுதன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வடமாகாண சபை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் உள்ள வைத்தியர்களை ஒன்றிணைத்து வடமாகாண மருத்துவர் மன்றம் உருவாக்குதல் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் நாவலர் கலா சார மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாங்களில் வைத்து விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் புதிதாக வடக்கில் உள்ள வைத்தியர்களை இணைந்து அமைக்கப்படும் மருத்துவ மன்றம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என  கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வடமாகாண மருத்துவர் மன்றத்தில் தலைவர் ப.அச்சுதன் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாங்களில் வைத்து விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் வடக்கில் உள்ள வைத்தியர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

இதனால் குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு சாதகமான முடிவுகளை மேற்கொள்ளுவோம் எனத் தெரிவித்தார்.

ad

ad