புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

இலங்கை தேசிய அரசா என ஆராய உச்சநீதிமன்றுக்கு அதிகாரமில்லை-அரசாங்கம் ஆட்சேபம்

இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கமா இல்லையா என்பதை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இல்லை என்று அரசாங்கத்தினால் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக கருத முடியாது என்று தீர்ப்பளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் விரசேகர தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சரவையின் அங்கத்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த ஆட்சேபனையை முன்வைத்தார்.

தற்போதைய தேசிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் முலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வழக்கறிஞர், நாடாளுமன்ற தீர்மானம் ஒன்று சம்பந்தமாக ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இல்லை என்று தெரிவித்தார்.

எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆட்சேபனை சம்பந்தமாக ஏதிர்வரும் 3 ஆம் தேதி ஆராயப்படுமென்று தலைமை நீதிபதி அறிவித்தார்.
அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தத்தின்படி, நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்திற்கே தேசிய அராசங்கம் என்று கூறப்படுவதாக மனு முலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய இரு கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு தேசிய அரசாங்கம் என்று குறிப்பிட முடியாது என்று தீர்ப்பளிக்குமாறு மனு மூலம் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

ad

ad