புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2016

திலீபனின் அஞ்சலி நிகழ்வுகளை மறைந்திருந்து படம்பிடித்தோர் மடக்கிப்பிடிப்பு!புகைப்படங்களும் அழிப்பு

தியாக தீபம்திலீபனின்  29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நல்லூரில் உள்ள   நினைவுத்தூபியில் இன்றையதினம் காலையிலும் மாலையிலும் அரசியற் பிரமுகர்கள் பொதுமக்கள்  உட்பட பலர்  அஞ்சலி செலுத்தினர்.இதன்போது காலைமுதல் அவர்களை இரகசியமானமுறையில் படம்பிடித்த இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அவர்கள் எடுத்த படங்களும் அழிக்கப்பட்டன

இன்று  மாலை 6.00 மணியளவில் இளைஞர் ஒருவர் திலீபன்  நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியபோது சந்தேகத்துக்கிடமான முறையில் மூவர்  அவரை புகைப்படமெடுத்தனர். புகைப்படம் எடுத்தவரை அங்கிருந்த  இளைஞர்  விசாரித்து புகைப்படக் கருவியை சோதனை செய்தபோது காலையில் இருந்து மறைவாக  நின்று  அஞ்சலி செலுத்தியவர்களை   புகைப்படம்   எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சந்தேகத்துக்கிடமான முறையில்  புகைப்படம்  எடுத்தவர்கள் காலையில்  இருந்து அருகில் உள்ள கடைகளில் மாறி மாறி நின்றதாக அங்கு நின்றவர்கள் குறிப்பிட்டனர்.

பின்னர்  அங்குள்ள இளைஞர்களின் முயற்சியினால் எடுத்தபுகைப்படங்கள் அழிக்கப்பட்டதுடன் அவர்களும் அவ்விடத்தைவிட்டு துவிச்சக்கரவண்டிகளில் சென்றனர்
.

26-Sep-2016 08:16 pm
கருத்து [ 0 ]
கருத்துக்கள்

ad

ad