புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2016

சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்-நீதிபதி இளஞ்செழியன்

சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

.நேற்றையதினம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது

பசு மாடு நீதி கேட்டு வந்தபோது மனுநீதி கண்ட சோழன் நீதி வழங்கினான். இப்படியான மண்ணிலே நீதி தேடி மாணவச் செல்வங்கள் நீதிபதிகளை நோக்கி ஓடிய காட்சிகள் யாழ் மண்ணில் நடைபெற்றன. ஜனாதிபதியின் கால்களில் விழுந்து மனுகொடுத்த காட்சிகளும் யாழ் மண்ணில் அரங்கேறியது. 
பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புடன் செயலாற்ற தவறியதால் அந்த மாணவச் செல்வங்கள் வீதிகளில்  நின்று நீதிதேடிய சம்பவம் அனைவரது கண்களையும் கலங்க வைத்ததாகவே நான்  இதைக்கருதுகிறேன். தொலைக்காட்சியில் பார்க்கும் போதும் வீதியில் நடப்பவற்றைப் பார்க்கும் போதும் அநீதிகள் நடந்த வண்ணமுள்ளன அதனைத் தட்டிக்கேட்க  யாருமே இல்லையா என குழந்தைகள் நீதிபதிகளை நோக்கி ஓடி வந்தார்கள். அதனால்  மல்லாக நீதிபதியை களத்தில் இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

ஓரு அநீதியைத் தடடிக் கேட்பதற்கு அந்தக் குழந்தைகள் ஓடிச்சென்ற இடங்களைப் பாருங்கள் வெட்கமாகவிருக்கிறது.  படித்தவர்கள்இ பண்பாடுடையவர்களின் சிகரம் எனக் கூறப்படும் யாழ் மண்ணில் இத்தகைய அலங்கோலம் நடைபெறும் போது அனைவரும் அமைதியாகத்தான் இருந்தோம். 

இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் யாழ் மண்ணில் அரங்கேறி விடக் கூடாது என்பதில்  கவனம் செலுத்தப்படும். மேலும்இ போதைப்பொருள் யாழ் மண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவிலிருந்து யாழ் மண்ணை நோக்கி போதைப்பொருட்கள் வந்து இறங்கிய வண்ணமுள்ளன. இவற்றைத் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கின்றோம்இ தண்டனை வழங்குகின்றோம் ஆனாலும் நீதிமன்றத்தால் மட்டும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. மக்கள் அனைவரும் போதைக்கெதிராக பாடுபட வேண்டிய பொறுப்புள்ளது.

சமூகத்தையும். இளம் சமுதாயத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. மிக விரைவில் போதைப்பொருள் யாழ் மாவட்டத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். 

இந்தவாரம் விபத்துக்களால் வடமாகாணத்தில் 20 பேர் இறந்துள்ளனர். அதிவேக ஓட்டங்கள் வாகனங்கள் போட்டிபோட்டு ஓடுதல் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. பாடசாலை நேரங்களில் வாகனங்களை வேகமாக செலுத்த வேண்டாம்இ வீதி சமிக்ஞைகளுக்கு மதிப்பளியுங்கள். 

மேலும் இனத்தில் பற்றுவையுங்கள் வெறி வேண்டாம் மதத்தில் பற்றுவையுங்கள் வெறி வேண்டாம் மொழியில் பற்றுவையுங்கள் வெறி வேண்டாம் கலாச்சாரத்தில் பற்றுவையுங்கள் வெறி வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டார்.  உனது கலாச்சாரத்தை மதிப்பது உனது உரிமை ஆனால் இன்னொரு இனத்தின் கலாச்சாரத்தை மிதிப்பது உனது உரிமையில்லை. அண்மையில் புத்திஜீவிகளை உருவாக்குமிடத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றது வேதனையளிக்கின்றது.

இனத்தின் கலாச்சாரமும் மிதிக்கப்பட்டது என்ற வரலாறு இல்லை மதிக்கப்பட்ட வரலாறே உண்டு. வந்தாரை வாழ வைக்கும் பூமி யாழ் மண்ணென பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கின்றோம். எனவே வன்முறைகளை நிறுத்த வேண்டும். சட்டம் தன் கடமையை செய்கின்றது. வன்செயல்களுக்கு இடமில்லைஇ சட்டத்தை கையில் எடுப்பதற்கும் இடமில்லைஇ சட்டம் சிறிது நேரம் தாமதமாகவே வேலை செய்யும். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள். சில நேரம் தாமதமான நீதியாக இருந்தாலும் அது நிச்சயமாக சான்றோரின் நீதியாக இருக்குமென தான் உறுதியளிப்பதாக தெரிவித்தார். 

இதேவேளை அகில  இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2016 இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் ஆரம்பமானது

இவ் விழாவின் முதல் நிகழ்வாக  ஆர்.சுந்தரமூர்த்தியின் குழுவினரால் மங்கல இசை இசைக்கப்பட்டது. பின்னர் யாழ் மருத்துவபீட உணர்வழியியல் நிபுனர் பிரேமகிருஷ்னா தம்பதியினரால்  மங்கல விளக்கேற்றப்பட்டது. பின்னர் சர்வமத தலைவர்களால் ஆசியுரை வழங்கப்பட்டது.

இவ் விழாவில் தலைமை உரையினை கொழும்பு கம்பன் கழக தலைவர் ஜெ.விஸ்வநாதன் தொடக்க உரையினை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆற்றினர்.

பின்னர் நூல் வெளியீடும் கலைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.

இறுதியாக இலக்கிய ஆணைக்குழு  நடைபெற்றது.'அன்பின் உச்சமென அறிஞர் பெரிதும் உரைப்பது' பிரிவினும் சுடுமோ எனும் காதலையே! என அ.இராமலிங்கமும் செய்குவன் அடிமை எனும் நட்பையே! என  இரா.ருக்மணியும்ஆருளர் எனின் உளேம் எனும் பாசத்தையே என  இ.சண்முகவடிவேலும் பங்கேற்று உரையாற்றினர்

ad

ad