புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2016

கலவரம் தொடர்ந்தால் பெங்களூரிலிருந்து பெரு நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பு: தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் கருத்து

பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, பெங்களூரில் கலவரங்கள் தொடர்ந்தால், தகவல், உயிரித் தொழில்நுட்பத்
துறை உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதாக பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 உலக அளவில் வர்த்தக நகரமாக அறியப்பட்ட பெங்களூரில் அடிக்கடி நிகழும் வன்முறைச் சம்பங்கள் காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறை முடங்குவதால் தொழில், வர்த்தகச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மாநில பொருளாதாரம் மட்டுமல்லாது, பலரது வாழ்வாதாரமும் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 மத்திய அரசின் வாகனச் சட்டம், காவிரி, மகதாயி நதிநீர்ப் பங்கீடு  விவகாரங்களுக்காக ஒரே மாதத்தில் கர்நாடக முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
 மேலும், காவிரி விவகாரத்தில் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டு தொழில் நிறுவனங்கள், கடைகள், பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பேருந்து, ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால், பணியிடங்களுக்குச் செல்ல முடியாமல் பலர் அவதிப்பட்டனர். இதனால், பல நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.
 இதுகுறித்து தகவல்தொழில் நுட்ப நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூரில் தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி, விமானவியல், நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் மத்திய, மாநில அரசுக்கு கோடிக்கணக்கில் வரி வருவாய் கிடைக்கிறது.
 இந்த நிறுவனங்களால் உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிறுவனங்கள் தடையின்றி செயல்படுவதால் பலரின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.
 எனவே, பெங்களூரின் தொழில்-வர்த்தகச் சூழல் பாதிக்கும் நடவடிக்கைக்ளை கட்டுப்படுத்துவது மாநில அரசின் கடமையாகும். காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக பெங்களூரில் கடந்த சில நாள்களாக தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாட்டை வெகுவாக பாதித்துள்ளது.
 இதே நிலை நீடித்தால் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில் துறையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும்.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலங்கானா மாநிலத்தை அமைக்கக் கோரி ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடந்த தொடர் வன்முறைகள் அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வேறு மாநிலங்களுக்குச் சென்றன.
 ஹைதராபாத்தில் செயல்பட்ட பல நிறுவனங்கள் பெங்களூரு, சென்னைக்கு நகர்ந்தன. இதேபோல, இங்கும் கலவரங்கள் நீடித்தால் பெங்களூரில் இயங்கி வரும் பல நிறுவனங்கள் ஹைதராபாத், சென்னைக்கு நகர தயங்காது.
 அடிக்கடி போராட்டம் நடத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளை தொழில் நிறுவனங்களால் சமாளிக்க இயலாது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க மலிவான ஊதியம், அறிவார்ந்த தொழில்திறன் ஆகியவற்றால்தான். ஆனால் தொழில் செய்ய நம்பமான இடமில்லை என்று அந்நிறுவனங்கள் கருதினால், வெளிநாடுகளுக்கு தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள நிறுவனங்கள் தயங்காது.
 எனவே, கலவரங்களைக் கட்டுப்படுத்தி தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கான அமைதியான சூழ்நிலையை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்றார்.

ad

ad