புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2016

வடக்கில் கடனை வசூலிப்பதற்காக recovery officer களுக்கு கட்டுப்பாடு

நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களில் வடக்கில் மட்டும் 450 நிதி நிறுவங்கள் உள்ளன இந்நிறுவனங்கள் வறிய மக்களிடம்
சென்று அல்லது கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு கடன் அடிப்படையில் பல நிதி உதவிதிட்டங்களை செய்கின்றன ஆனால் அதை வசூலிப்பதற்காக கிராமங்களிற்கு அல்லது கடனாலிகளின் வீட்டிற்கு நேரகாலமின்றி கடனை வசூலிப்பதற்காக recovery officer என்றொருவர் சென்று கடன்களை வசூல் பன்னுகிறார் இவ்விடயமானது பல மக்களிற்கு பலத்த அசெளகரியங்களை ஏற்படுத்துகின்றதுடன் வடக்கை பொறுத்தவரையில் பல குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பமாக காணப்படுவதால் வெவ்வேறு இன்னல்களுக்கும் எம் சமூகம் முகம் கொடுக்கநேருகிறது எனவே இலங்கை மத்திய வங்கியால் வடக்கிற்கென புதியதொரு நிதிநிறுவன சட்டமொன்றை அறிமுகபடுத்தியுள்ளது இதனடிப்படையில் வடக்கில் உள்ள சகல நிதி நிறுவனங்களின் கடன் வசூழிக்கும் உத்தியோகத்தர்கள் காலை 08.00மணி முதல் மாலை 05.00மணி வரையிலுமே எந்த ஒரு வீட்டிற்கோ அல்லது கிராமத்திற்கோ தமது கடைமையின் நிமித்தம் செல்லலாம் எனவும் இதனை மீறும் சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது காவல்துரையின் அவசர அழைப்பிற்கோ முறைப்பாடு செய்யும் பட்சத்தில் உத்தியோகத்தர் கைது செய்யலாம் எனவும் இச்சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது இச்சட்டமூலமானது இலங்கை மத்திய வங்கி ஆளுநரால் வடக்கு மாகாணசபைக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டு வடக்கு மாகாணசபையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது இதேவேளை இச்சட்டமானது கடந்த வருடமே அமுல் படுத்தப்பட்டிருந்தாலும் யாரும் கடைபிடிக்காமல் இருப்பதனால் எதிர்வரும் காலங்களில் இதனை சகல நிதிநிறுவனங்களும் அமுல்படுத்துமாறு மத்திய வங்கி அறிவித்தல் விடுத்துள்ளது மீறும் பட்சத்திலும் முறைப்பாடு கிடைக்கப்பெரும் பட்சத்திலும் குறிப்பிட்ட நிறுவனம் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது மத்திய வங்கி ஆகவே பொதுமக்கள் இதனை கருத்தில்கொண்டு தமது அசெளகரியங்களை தவிர்ப்பதுடன் உத்தியோகத்தர்களுக்கு ஆதரவையும் தந்துவமாரும் அறிவிக்கப்பட்டுள்ளது
loa
loa1

ad

ad