புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2016

கனடாவில் முதன் முதல் சுவிஸ் டிரைவிங் அமைப்பை பயன்படுத்தும் அங்கவீனமான 18-வயது பல்கலைக்கழக மாணவன்

18-வயதுடைய பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவன் Duchenne எனப்படும் ஒரு வகை தசைநார்த் தேய்வு
நோயுடன் வாழ்கின்றான். நவீன கலை மின்னணு சுவிஸ் டிரைவிங் அமைப்பை கனடாவில் முதல் முதல் பயன்படுத்தும் நபர் இவனாவான். குறைந்த கை செயற்பாடு கொண்டவர்கள் வாகனமொன்றை கட்டுப்பாட்டிற்குள் ஒரு ஒற்றை இயக்கு பிடியின் உதவியுடன் வைத்திருக்க வைத்திருக்க முடியும். ஷான் லெயில் என்ற இம்மாணவன் சக்கர நாற்காலி ஒன்றை உபயோகித்து வந்தான் இவன் வளர வளர இவனது நோய் தசைகளை பலவீனப்படுத்திவந்ததே காரணமாகும். இந்த அமைப்பு கை கட்டுப்பாட்டு அளவை மாற்ற கூடியது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் அங்கவீனம் ஒரு காப்புறுதி அல்லது பணி பாதுகாப்பு கோரிக்கை சம்பந்தப்பட்டதாக இருந்தால் மட்டுமே மாகாண திட்டம் வாகன தழுவல்களிற்கு உதவும் என பிரிட்டிஷ் கொலம்பிய முதுகு தண்டு காய பிரிவு தெரிவிக்கின்றது. லயில் குடும்பத்தினர் தங்கள் சொந்த பணத்தில் ஷானிற்கு குறிப்பிட்ட வாகனத்தை வாங்கினர். வாகனத்தின் விலை 70,000டொலர்களிற்கும் அதிகமாகும். பல்கலைக்கழகத்திற்கும் சென்று கொண்டு வேலையும் செய்துவரும் இம்மாணவன் மற்றய ஆண்களைப் போன்று அதே சமூக வாழ்க்கையை வாழ விரும்புகின்றான். 

ad

ad