புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2016

முதல் ஒரு நாள் போட்டி: நியூசிலாந்து 190 ரன்களில் ஆட்டமிழந்தது!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மாசாலாவில் இன்று நடைபெற்று வரும்
  முதல் ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி  43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 190 ரன்கள் எடுத்தது.
டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டிருந்தார். மந்தீப் சிங்,. ஜெயந்த் யாதவ், தவல் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
ஆரம்பம் முதலே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறியது. பொறி பறந்த பந்துவீச்சின் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. ஒரு கட்டத்தில் 50 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து 5 விக்கெட்களை இழந்திருந்தது .
நியூசிலாந்து அணியில் 3 பேர் டக் அவுட் ஆனார்கள். டாம் லாதம்தான் சற்று கவுரவத்தைக் காக்கும் வகையில் ஆடினார். தனி ஒருவனாக அவர் போராடி நிறுத்தி நிதானமாக ஆடியதால்தான் நியூசிலாந்தால் 100 ரன்களைத் நியூசிலாந்தால்  தாண்ட முடிந்தது.
40 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 166 ரன்களை எடுத்திருந்தது. மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இறுதிவரை போராடிய டாம் லோதம் மட்டும்  ஆட்டமிழக்காமல் 98 பந்துகளில் 79 ரன்களை எடுக்க, நியூஸிலாந்து அணி 43.5 ஓவர்களில் 190 ரங்களுக்கு ஆட்டம் இழந்தது.

ad

ad