புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2016

25 வருட சிறை வாழ்க்கை; விடுதலை வேண்டும் : தேசிய பெண்கள் ஆணையத்தில் நளினி மனு அனுப்பியுள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
பல வருடங்களாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற மனு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறது. இந்நிலையில், தேசிய பெண்கள் ஆணையத்திற்கு நளினி மனு அனுப்பியுள்ளார்.
“இந்தியாவிலேயே 25 ஆண்டுகள் சிறையில் இருந்த சிறைவாசி நான். மற்ற மாநில சிறைகளில் 10 அல்லது 14 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த பல பெண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நான் கடந்த 25 ஆண்டுகளாக சாதாரண பெண்ணாக குடும்ப வாழ்க்கையை வாழவில்லை. லண்டனில் வசிக்கும் என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். எனவே தேசிய பெண்கள் ஆணையம், இந்திய அரசியலைமைப்பு சட்டம் 72-ஐ பயன்படுத்தி, என்னை விடுதலை செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad