புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2016

வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 26 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்
அனுதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு லண்டன் சிறப்பு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் சிங்கப்பூர் டாக்டர்கள் என தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளை பரவிவரும் நிலையில், பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்து பேசும்போது புகைப்படங்களை வெளியிட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியது.

மேலும், சிங்கப்பூரிலிருந்து வந்த பெண் டாக்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை சிங்கபூரில் வைத்து சிகிச்சை அளித்தால் பூரண குணமடைய முடியும் என தெரிவித்த நிலையில், அதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்ததாகவும், முதல்வர் ஜெயலலிதா கடல் கடந்து செல்ல விரும்பாதவர் எனவும், அவர் தீபாவளிக்கு வீட்டில் இருந்தால் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறிறித்து அப்போலோ மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமாரிடம் ஆலோசித்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், முதல்வரின் வீட்டில் லிப்ட் அமைக்கும் பணியும், அங்கு வைத்து சிகிச்சை அளிக்க ஏதுவாக அப்போலோ மருத்துவமனையிலிருந்து சிகிச்சை கருவிகள் போயஸ் தோட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தீபாவளிக்கு முன் வரும் 27ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் கொண்டாட தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad