புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2016

ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை அறங்கூறுநர் சபை முன் நடத்துவதா, இல்லையா என்ற முடிவை எதிர்வ ரும் 27 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி மணிலால் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 பேர் மீதான   வழக்கு விசாரணைகளை அறங்கூறுநர் சபை முன் நடத்துமாறு கடந்த மாதம் ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்த னர்.

இந்த கொலை வழக்கில் இரண்டு கடற்படையினர், ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர், கருணா தரப்பை சேர்ந்த மூன்று பேர் என ஆறு பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களில் கருணா அணியை சேர்ந்த மூன்று பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் புறக்கணி த்து வருகின்றனர்.

இவர்கள் மூன்று பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் குற்றவியல் தண்ட னைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அறங்கூறுநர் சபையை கோர முடியாது.

எனினும் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அறங்கூறுநர் சபையை கோர முடியும்.

எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட தரப்பினர், அறங்கூறுநர் சபை முன் விசாரணை நடத்த அனு மதிக்க கூடாது என்று கடுமையான எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

ad

ad