புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2016

அப்பல்லோ 2-வது தளத்தில் இருந்து முதன்முறையாக தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெ.,



முதல்வர் ஜெயலலிதா முதன் முறையாக அப்பல்லோவின் 2வது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்டார்.


முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க நுரையீரல் பிரிவில் சிறப்பு மருத்துவரான லண்டன் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் பீலே சென்னை வந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி இதுவரை ஜெ. வுக்கு எக்ஸ்ரே மட்டுமே எடுத்துவந்த மருத்துவக் குழுவினர், நேற்று வெள்ளிக்கிழமை அன்று சிடி ஸ்கேன் எடுத்துள்ளனர். இந்த ஸ்கேன் எடுக்க 3 மணி நேரம் ஆனது.

இதற்காக 2வது தள்ளத்தில் இருக்கும் கிரிட்டிக்கல் கேர் வார்டில் இருந்து தரை தளத்தில் இருக்கும் சிடி ஸ்கேன் அறைக்கு ஜெ.,வை அழைத்து வரவேண்டியிருந்ததால்,  மதியம் 1 மணி முதல் 4 மணி வரை  4 தளங்களிலும் யாரையும் நடமாடவிடவில்லை.  அப்பல்லோவின் இயக்கத்தை மொத்தமாக முடக்கிவிட்டு, ஜெ., சிடி ஸ்கேன் எடுத்துச்சென்றபிறகே, அவர் 2வது தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட பிறகு, வழக்கம்போல அப்பல்லோ இயங்கின.  ஆட்கள் நடமாடத்துவங்கினர்.

ad

ad