புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2016

அதிரடி தாக்குதல்களை தொடங்கினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? மோடி எச்சரிக்கை

கருப்பு பணத்தை வெள்ளையாக்க மத்திய அரசு அறிவித்த திட்டத்தில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரியும், அபராதமும் வசூலிக்கப்பட்டு அந்தப் பணம் வெள்ளைப் பணமாக சந்தையில் புழங்க தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

குஜராத் மாநிலம், வதோதராவில் மாற்றுத் திறனாளிகள் 8,000 பேருக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மேலும் பேசிய மோடி, நேரடி மானியத் திட்டம் மூலம் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட ரூபாய் 36,000 கோடி அரசுக்கு மிச்சமாகியுள்ளது. இந்த இரு நடவடிக்கைகள் மூலமும் ரூபாய் 1 லட்சம் கோடி அதிரடித் தாக்குதல்கள் இல்லாமல் அகிம்சை வழியில் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவேளை கருப்புப் பணத்தை மீட்கவும் அதிரடித் தாக்குதல் நடத்தினால், எவ்வளவு பெரிய தொகை மீட்கப்படும் என்பதை நீங்களே சிந்தித்து பார்த்துக் கொள்ளுங்கள். ஊழலுக்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு போராடி வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு அவர்களுக்கான மானியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார். 

ad

ad