புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2016

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் புனர்வாழ்வு-சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்க ப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு மற்றும் தமிழரசுக் கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக, வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டு ள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்-

”அரசியல் கைதிகள் தொடர்பாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்பாக தீர்வு வழங்கப்படுமென அரசாங்கம் உறுதியளித்ததால், அப்போது அவர்கள் முன்னெடு த்திருந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், கொடுத்த வாக்குறுதி யின்படி அரசாங்கம் நடக்கவில்லை. இவ்விடயம் தொடர்பாக நான் நாடாளுமன்றிலும் பேசி யிருந்தேன்.

எவ்வாறாயினும்,217பேராக இருந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று 96 பேராக குறைந்து ள்ளனர்.அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தீர்மானத்தின் அடிப்படை யில்தான் புனர்வாழ்வு கோரப்பட்டது. எனினும் அவர்களது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்த ஆட்சேபனையினால் அது மாற்றமடைந்தது. எனினும், தற்போது பலருடன் கலந்துரையாடி மீண்டும் புனர்வாழ்வுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன” என்றார்.

ad

ad