புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு

வடக்கில் சுமார் 9000 முன்னாள் போராளிகள் உள்ளதாகவும் இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் வட மாகாண போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமான வட மாகாண கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது விடிவிற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை மறந்து விடக் கூடாதென தெரிவித்த டெனிஸ்வரன், முன்னாள் போராளிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உதவித்திட்டங்கள் குறித்து முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இவர்களது விபரங்களை வடக்கு முதலமைச்சரும் கோரியுள்ள நிலையில், அவர்களுக்கு மேலும் பல உதவிகள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும்அவர் குறிப்பிட்டார்.

ad

ad