புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2016

வடமாகாணசபை தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள்-அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிப்பு

வடமாகாணசபை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில், பல்வேறு  விமர்சனங்கள்  எழுவதாகவும் எனினும் தமக்கு வாக்களித்த மக்க ளுக்கு சேவை செய்ய முடியாதுள்ளதாகவும்  வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு சபையினால்  94 ஆவது ஆண்டு   சர்வதேச  கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வு கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் வட மாகாண கூட்டுறவு அமைச்சர்  பொ.ஐங்கரநேசன் வட மாகாணசபை உறுப்பினர்களான க.சிவநேசன், து.ரவி கரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே வட மாகாண விவசாய  அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இவ்வாறு  தெரிவித்தார்.

மாகாணசபையினால் தமது தேவைகளை நிறைவேற்றப்படும் எண்ணி மக்கள் வாக்களித்ததாக குறிப்பிட்ட விவசாய அமைச்சர், மாகாணசபையை பொறுப்பேற்றுக்கொண்ட தமக்கு  குறிப்பிட்ட எல்லைக்குமேல் மக்களுக்கு  எதையும் செய்யமுடியாது  என தெரியும்  எனவும் கூறினார்

ad

ad