புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2016

நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படை நேற்று சிறைப்பிடித்து சென்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 76 விசைபடகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 223 விசைப் படகுகளிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 

இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்லம் செட்டி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தங்கமணி (50), பிரதீப் (23), அருண் (21), சண்முகவேல் (35), கோபு (27) ஆகிய 5 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். 

நேற்று அதிகாலை அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஐவரையும் சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 5 பேரையும் விசைப்படகுடன் சிறைப்பிடித்தனர். 

இதையடுத்து அவர்களை இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என அந்த செய்தியில் தெரிவிக்கப்ப  ட்டுள்ளது

ad

ad