புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2016

திருமாவுக்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது ஏன்?' -முதல்வரைச் சந்திக்கச் சென்ற பின்னணி

மிழக ஆளுநருக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து என்ன தகவல்கள் தரப்பட்டதோ,
அதே தகவல்கள்தான் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கும் தரப்பட்டது. ' ஓர் அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் நிலவரத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் என கார்டன் அழைத்ததன் பேரிலேயே திருமா சென்றார்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 12 நாட்களாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வரை சந்திக்க மருத்துவமனை சென்றார். ' முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு ஆளுநர் சென்றார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் குழு விளக்கமாக எடுத்துரைத்தது. அதற்காக மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் ஆளுநர். முதல்வர் குணமடைந்து வருகிறார்' என ஆளுநர் அலுவலகம் செய்திக் குறிப்பு குறிப்பிட்டிருந்தது.
ஆனால், ' முதல்வரை ஆளுநர் சந்திக்கவில்லை' என்பதே பிரதான செய்தியாக மாறிப்போனது. இந்நிலையில், நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். இதை அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. திருமாவின் பயணம் அரசியல்ரீதியாகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருமாவின் வருகையையொட்டி முதல்வர் சிகிச்சை பெறும் இரண்டாம் வார்டில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. மருத்துவமனையின் பிற வார்டுகளைப் போல் இயல்பு நிலையில் காட்சியளித்தன. 
' முதல்வரை சந்திக்கச் சென்றதன் பின்னணி என்ன?' என அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். " கடந்த சனிக்கிழமை ஆளுநர் வந்துவிட்டுச் சென்ற பிறகும், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முதல்வர் உடல்நிலை குறித்து வேறுமாதிரியான தகவல்கள் பரவின. தீவிர சிகிச்சை நடந்து வருவதால், மருத்துவமனையே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்தநேரத்தில், ' எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் தலைவர் யாராவது மருத்துவமனைக்கு வந்து, உண்மையை வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும்' என மூத்த அமைச்சர் ஒருவர் சசிகலாவிடம் தெரிவித்தார். ' திருமாவளவன் சரியான தேர்வாக இருக்கும். அவரைப் பற்றி ராமதாஸ் நேரடியாக நம்மிடம் வந்து புகார் தெரிவித்தார். திருமா மீது ஆளுங்கட்சிக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதைக் காட்டுவது போலவும் இருக்கும். முதல்வர் குறித்து அவர் மீடியாக்களிடம் பேசினால், தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையும் ஏற்படும்' எனவும் விவரித்தார். இதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்தார். 
இதையடுத்து, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசிய சசிகலா, ' என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது? முதல்வர் எப்படி இருக்கிறார்?' என்பது பற்றி திருமாவளவனிடம் விரிவாக எடுத்துச் சொல்லுங்கள்' என உத்தரவிட்டார். இதன்பின்னர் மருத்துவமனைக்கு வந்த திருமாவளவனை மூத்த அமைச்சர் ஒருவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதல்வர் சிகிச்சை பெறும் இரண்டாம் தளத்துக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கிருந்த மருத்துவர்கள், முதல்வர் உடல்நிலை குறித்து விவரித்தனர். திருமாவளவனும் நேரடியாக முதல்வரை சந்திக்கவில்லை. இதையடுத்து வெளியில் வந்த திருமாவளவன், ' தமிழகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமான முதல்வரை சந்திப்பது என் கடமை. அந்த அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும். வீடு திரும்பி, வழக்கம்போல் அரசியல் கடமைகளை ஆற்ற வேண்டும்' எனப் பேசிவிட்டுச் சென்றார். ஆளுநர் வந்தபோது வெளியான தகவல்களைவிடவும், திருமாவின் விளக்கம் தொண்டர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது" என்றார் விரிவாக. 
இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம். " மருத்துவமனைக்கு யாருடைய அழைப்பின் பேரிலும் நாங்கள் செல்லவில்லை. ஓர் அரசியல் கட்சித் தலைவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அரசியல் நாகரிகத்தோடு அவரை சந்திக்கச் சென்றோம். அ.தி.மு.க கூட்டணியில் மரியாதையாக நடத்தப்பட்டோம். கூட்டணியைவிட்டு வெளியே வந்தபோதும், ' எங்கிருந்தாலும் வாழ்க' என்றுதான் முதல்வர் அறிக்கை வெளியிட்டார். அரசியல்ரீதியாக எந்தவித முரண்பாடும் அ.தி.மு.கவுடன் எங்களுக்கு இருந்ததில்லை. தற்போது முதல்வரை சந்திக்கச் சென்றதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது" என்றார் தெளிவாக.

ad

ad