புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2016

சமூக ஆர்வலர் கொலையில் திமுக பிரமுகர் கைது

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான விஸ்வநாதன். சமூக ஆர்வலரான இவர் கடந்த மாதம் 5ஆம் தேதி திடீரென காணாமல் போனார். அவரது மகள் அமுதா இது குறித்து குவாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணை நடத்தியதில் நைனாகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. உடனே போலீசார் அவரை விசாரித்துள்ளனர். விசாரணையில் விஸ்வநாதனை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கொலை செய்யப்பட்ட விஸ்வநாதனின் உடலை பெண்ணாடம் - கோட்டைக்காடு வெள்ளாற்று கரையோரம் புதைத்தாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாலமுருகனை போலீசார் விஸ்வநாதனை புதைத்த இடத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்றதும் இந்த இடம் கடலூர் மாவட்ட எல்லையில் வருகிறது என்று சொல்லி குவாகம் போலீசார் தோண்டவில்லை. உடனடியாக கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாசில்தார், செந்துறை தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அளக்கப்பட்டது. நில அளவையில் சம்பவ இடம் திட்டக்குடி தாலுக்காவுக்கு சொந்தமானது என்று தெரிய வந்ததும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவர்கள் வந்து பிரோத பரிசோதனை செய்து அங்கேயே மீண்டும் சடலத்தை புதைத்தனர். 

பின்னர் இந்த கொலை தொடர்பாக சிறுகளத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் திமுகவின் கடலூர் மாவட்டம், நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், அரியலுர் டிஎஸ்பி அலுவலகத்தில் சரண் அடைந்தார். 

நிலம் ஒன்று விற்பனை செய்த விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ad

ad