புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2016

சூழகம் அமைப்பின் முயற்சியில் நயினாதீவில்ஐக்கிய விளையாட்டு கழகம் உருவாக்கமும் ஊக்குவிப்பு உதவியும்

நயினாதீவில் 9 விளையாட்டுக்கழகங்கள் காணப்படுகின்றன , ஆனாலும் இதுவரை காலமும் மாவட்ட மட்டத்தில் எந்த ஒரு அணியும் சிறப்பாக பிரகாசித்ததாக தகவல் இல்லை , அண்மைக்காலங்களில் மாவட்ட மட்ட உதைபந்தாட்டத்தொடர்களில் நயினாதீவினைச் சேர்ந்த எந்தவொரு கழகமும் பங்குபற்றியதாகவும் தகவல் இல்லை . தீவக மட்ட போட்டிகளிலும் ஞானவைரவர் மற்றும் அண்ணா அணிகள் மாத்திரமே பங்காற்றிவருகின்றன . இந்நிலையினை கருத்திற்கொண்டு நயினாதீவின் அனைத்து கழகங்களினையும் இணைத்து நயினாதீவு ஐக்கிய விளையாட்டு கழகம் ( NAINATHEEVU UNITED ) எனும் அணியினை உருவாக்கி மாவட்ட + தேசிய ரீதியிலான போட்டிகளில் #நயினாதீவு எனும் பெயரை ஓங்கி ஒலிக்கச்செய்யும் நோக்கோடு சூழலியல் மேம்பாடு அமைவனத்தால் ( #சூழகம் ) நயினாதீவு அண்ணா சனசமூக நிலையத்தில் கடந்த 20 . 08 . 2016 அன்று கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இந்நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ( SSP ) திரு . கணேசநாதன் , ஊர்காவற்துறை + வட்டுக்கோட்டை பகுதிகளுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ( ASP ) திரு . துசித்த குமார , யாழ் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை
விரிவுரையாளர் + யாழ் உதைபந்தாட்ட சம்மேளன உபதலைவர் திரு . மாணிக்கவாசகர் இளம்பிறையன் , சமூக ஆர்வலர் திரு . சபா பரமேஸ்வரன் , கிராமசேவகர் திரு . கோகுலன் , சூழகம் ஒருங்கிணைப்பாளர் திரு . கருணாகரன் குணாளன் மற்றும் கழக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர் . தீவகமட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளிலும் வலைப்பந்து ( netball ) போட்டிகளிலும் நயினாதீவினைச் சேர்ந்த அணிகள் பல்வேறு சிறப்பான வெற்றிகளை குவித்துள்ளன . ஆகவே இப்போட்டிகளிலும் ஐக்கிய அணிகளினை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையும் கழக பிரதிநிதிகளால் விடுக்கப்பட்டது . அக்கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது . நயினாதீவு யுனைட்டெட் கழகத்திற்கான இடைக்கால நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது . ஞானவைரவர் கழகத்தினை சேர்ந்த திரு . யசோதரன் தலைவராகவும் , செயலாளராக அண்ணா கழகத்தினை சேர்ந்த திரு . ஜெயராஜ் அவர்களும் பொருளாளராக இஸ்லாம் கழகத்தினை சேர்ந்த திரு . ஜிப்ரில் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர் . அத்துடன் ரூபாய் இருபதினாயிரம் பெறுமதியான உதைபந்துகள் சூழகம் ஒருங்கிணைப்பாளர் குணாளன் கருணாகரன் அவர்களது நிதியுதவி மூலம் கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன . இக்கலந்துரையாடல் சிறப்பாக நடைபெறுவதற்கு பெரிதும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்த அண்ணா சனசமூக நிலையத்தினருக்கு எமது நன்றிகள் - #சூழகம் -



ad

ad