புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2016

'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம்

பனை அபிவிருத்தி சபையின் 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்னும் தொனிப்பொருளிலான பனை சார் உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் தொடர்பான கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு  இன்று காலை 11 மணியளவில் யாழ் மத்திய கல்லூரியின் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் தலைமையில் ஆரம்பமானது. 

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் எம். சுவாமிநாதன், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், கௌரவ விருந்தினர்களாக யாழ் மருத்துவ பீட உயிர் இரசாயனவியல் தலைவர் கலாநிதி ச.பாலகுமார், பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் ப.சீவரத்தினம், யாழ் மத்திய கல்லூரி அதிபர் க.எழில் வேந்தன், வடமாகாண பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க சமாசத் தலைவர் நா.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 குறித்த நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையில் 15 வருடங்களை பூர்த்தி செய்த உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், பனை சார் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது  இன்றிலிருந்து   மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி சபை   கூட்டுறவு சங்கங்களின் தலைவர்,முகாமையாளர், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ad

ad