செவ்வாய், அக்டோபர் 18, 2016

சுயாதீன ஆணைக்குழு விசாரணைகளை இரத்து செய்யும் நோக்கம் இல்லை!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைகளை இரத்துச்செய்வதற்கான எந்த நோக்கமும் ஜனாதிபதியிடம் இல்லை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள், அரசியல் ரீதியாக செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதி ல்லை   என்று ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

நாட்டுக்காக தியாகங்களை மேற்கொண்ட போர்வீரர்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் சில அரசியல்வாதிகள்,ஜனாதிபதியின் கருத்தை, தமது அரசியலுக்காக திரிபுபடுத்தியுள்ள தாக அமைச்சர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதையே குறியாக கொண்டிருக்கிறார்கள் என்றும் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்