புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2016

தென்னிந்திய கலைஞர்களால் யாழ் மாநகரசபையும் பயன்பெற்றது

பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு  சுமார் 8 லட்சம் ரூபா வரு மானம் கிடைத்துள்ளதாக மாநாகர ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தென்னிந்திய கலைஞர்களானஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்,கங்கைஅமரன்ஆகியோரின் யாழ். வருகையின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

குறிப்பாக மாநகரப் பிரதேசத்திற்குள் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு வரியாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் , மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தினை பயன்படுத்திய வகையில் குறித்த இடம் 3 நாட்களிற்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. நாள் ஒன்றிற்கு 11 ஆயிரம் ரூபா வீதம் 33 ஆயிரம் ரூபாவும் இதற்கான 13 வீத வரிப்பணமும் மாநகரசபைக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழில் இடம்பெற்ற ஒரு நாள் நிகழ்வினால் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா அளவிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. என்றார். 

ad

ad