புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2016

பற்றிக்ஸ் கல்லூரியை வீழ்த்தியது யாழ். மத்திய கல்லூரி

யாழ் மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 17 வயதுக்குட்பட்ட பாடசாலைகளின் அணிகளுக்கு இடையில் நடத்திய துடுப்பாட்டத் தொடரில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பியனானது யாழ். மத்திய கல்லூரி அணி.



சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று புதன்கிழமை 17 வயதுக்குட் பட்டோருக்கான இறுதியாட்டம் நடைபெற்றது. 
யாழ் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி 40.4 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. 

அதிகபட்சமாக மதுசன் 72 ஓட்டங்களையும் நிதுசன் 34 ஓட்டங்களையும், தேனுசன் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சென். பற்றிக்ஸ் கல்லூரி சார்பில் அனோசன், ரதிசன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

300 பந்துகளில் 223 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 33.4 ஓவர்கள் முடிவில் 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 


இவ் அணி சார்பில் பற்றிக் 29, ராஜபோல் 13, டில்சான் 10 ஒட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மத்திய கல்லூரி சார்பில் மதுசன் ,குகசதுஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் நிதுசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் மதுசன், சிறந்த பந்து வீச்சாளராக குகதாஸ், சிறந்த களத்தடுப்பாளராக ஐவன் றொசாந்தன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

ad

ad